கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

திட்டக்குடி அருகே உள்ள சாத்தநத்தத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்ற அசோக்குமார் (33), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதேப்பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்வதாக கடத்திச் சென்று கடந்த 7-11-2019 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எம்.எழிலரசி நேற்று செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத் துறையிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். அதே போன்று, தண்டனைப் பெற்றவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதால் அவர்களின் எதிர்காலம் கருதி அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in