பெரியார் வேடமிட்ட சிறுவனுக்கு மிரட்டல்: கயத்தாறு பேரூராட்சி பணியாளர் கைது

பெரியார் வேடமிட்ட சிறுவனுக்கு மிரட்டல்: கயத்தாறு பேரூராட்சி பணியாளர் கைது
Updated on
1 min read

முகநூல் பக்கத்தில் சென்னையைச் சேர்ந்த சிறுவனை மிரட்டும் வகையில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சி தற்காலிகப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த சிறுவன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் போன்று வேடம் அணிந்து நடித்திருந்தார். இந்த வீடியோ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. வீடியோவைப் பார்த்துவிட்டு, அந்தச் சிறுவனை அடித்து கொலைசெய்ய வேண்டும் என்று, முகநூலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் பதிவிட்டிருந்தார்.

வெங்கடேஷ்குமார் பாபு
வெங்கடேஷ்குமார் பாபு

திமுக நிர்வாகி போலீஸில் புகார்

இதுகுறித்து, கயத்தாறு நகர திமுக செயலாளர் சுரேஷ்கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தினர்.

வெங்கடேஷ்குமார் பாபு (37) என்பவர் கோவில்பட்டி பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் என்பதும், கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிக சுகாதாரப் பணியாளராக பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in