Published : 27 Feb 2022 07:43 AM
Last Updated : 27 Feb 2022 07:43 AM

பாம்பன் பாலத்தில் வாகனம் மோதி விபத்து: கடலில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

ராமேசுவரம்

பாம்பன் பாலத்தில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கடலில் தூக்கி வீசப்பட்டு உயி ரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மலையூரைச் சேர்ந்த மாயன் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் நேற்று அதிகாலை புறப்பட்டு ராமேசுவரத்துக்கு சாமி தரிசனத்துக்காக வந்துள்ளனர். செல்லும் வழியில் காலை 6 மணியளவில் வாகனத்தை பாம்பன் பாலத்தில் நிறுத்தி சுற்றிப்பார்க்க இறங்கியுள்ளனர்.

மாயன் பாம்பன் பாலத்தின் வடக்கு பக்கத்திலிருந்து தெற்கு பக்கமாக சாலையை கடக்க முயன்றபோது, பாம்பனில் இருந்து மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியதில் மாயன் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பாலத்தின் தென் திசை கடல் பகுதியில் விழுந்தார்.

கடலில் விழுந்த மாயனை அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் முன்பே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாம்பன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த மண்டபத்தைச் சேர்ந்த கரன் என்பவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x