

திசையன்விளை கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் சண்முகபுரத்தை சேர்ந்த உதயகுமார் (38) என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே பொருட்கள் சிதறி கிடைந்தன. ரூ.80 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. திசையன்விளை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே இறங்கிய மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். பின்னர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.