

நயினார்கோவில் அருகே பணியின்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தைச் சேர்ந் தவர் பூமி(44). கொத்தனாரான இவர் நேற்று காலை நயினார்கோவில் அருகே அகரம் கிராமத்தில் அழகேசன் என்பவரது வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சிமெண்ட் பூச்சு வேலைக்கு பயன்படுத்திய அலுமினிய பட்டை உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக் கியது. இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு, கொடிக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத் துக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற் கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதனையடுத்து, திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.