

புதுச்சேரியில் மருந்தாளுநரிடம் 12 பவுன் நகைகளை திருடியதாக தமிழக காவல்துறைக்கு தேர்வான பெண்ணை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செஞ்சி ஆலம்பூண்டி குளக் கரை வீதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி மாதவி (42). புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளு நராகப் பணியாற்றி வருகிறார். இதற்காக புதுச்சேரி கொசப் பாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார். கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து 12 பவுன் நகைகளை அணிந்துகொண்டு புதுச்சேரி வந்தார். நிகழ்வில் பங்கேற்று விட்டு, நேற்று முன்தினம் நகைகளை மகளிர் விடுதியில் உள்ள தனது அறையின் பாதுகாப்பு பெட்டியில் வைத்துவிட்டு வேலைக்குச்சென்றுவிட்டார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
இதுகுறித்து மாதவி உருளை யன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார், மகளிர் விடுதியில் மாதவியின் அறையின் அருகில்இருந்த மற்றொரு அறையில் தங்கியிருந்தவர்களை விசாரித்தனர்.
இதில் புதுச்சேரி காட்டேரிக் குப்பம் புதுநகரைச் சேர்ந்த சிவபிரித்திகா என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது அறை யில் சோதனையிட்டனர். அப்போது நாப்கினுள் 10 பவுன் நகையை மறைத்து வைத்திருந்ததும், அதில் 2 பவுன் நகைகளை விற்று பணம் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து சிவபிரித் திகாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். சிவபிரித்திகா தமிழக காவல்துறையின் பெண்காவலர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பி டத்தக்கது.