நாகை: மூத்த மகள் காதல் திருமணத்தால் மன உளைச்சல்: மனைவி, 2 மகள்களை கொன்று ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

நாகை: மூத்த மகள் காதல் திருமணத்தால் மன உளைச்சல்: மனைவி, 2 மகள்களை கொன்று ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
Updated on
1 min read

நாகை மாவட்டம் சிக்கல் அருகே தனது மூத்த மகள்காதல் திருமணம் செய்துகொண்டதால் மனஉளைச்சலில் இருந்த ஓட்டல் உரிமையாளர், மனைவி மற்றும் 2 மகள்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் சிக்கலைஅடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(55). தனது வீட்டிலேயே சிறிய அளவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (45). இவர்களுக்கு 3 மகள்கள்.

இவர்களில் 21 வயதானமூத்த மகள், புதுச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால், லட்சுமணன் மனஉளைச்சலில் இருந்து வந்துஉள்ளார். கடந்த 4 நாட்களாக ஓட்டலையும் திறக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு லட்சுமணன், தனது மனைவி புவனேஸ்வரி, 2 மகள்கள் ஆகியோர் தலையில் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே, லட்சுமணன் வீட்டிலிருந்து நேற்று காலை நீண்டநேரமாகியும் யாரும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, லட்சுமணன் தூக்கில் சடலமாகவும், அவரது மனைவி, மகள்கள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் தெரியவந்தது.

தகவலறிந்த நாகை எஸ்.பிஜவஹர் மற்றும் கீழ்வேளூர் போலீஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in