Published : 17 Feb 2022 07:38 AM
Last Updated : 17 Feb 2022 07:38 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஞ்சா விற்றதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ச.அப்துல்மஜீத்(33). இவர், புதுக்கோட்டை நகராட்சியில் 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதன்பின்,அவரையும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் முரளி(36), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வட்டம் அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த மயில்ராஜா மகன் சர்மா(20), கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்த தேரடியான் மகன் நரேந்திரகுமார்(27), முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் கதிர்வேல்(34), காந்தி நகரைச் சேர்ந்த ஹக்கீம் மகன் மியாகனி(22) ஆகியோரையும் நேற்று கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், 2 தராசுகள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT