அரக்கோணத்தில் மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: 2 இளைஞர்கள் கைது

அரக்கோணத்தில் மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

அரக்கோணத்தில் மதுபோதை தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் போலீஸ் லைன் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் இருப்பதை நேற்று காலை சிலர் பார்த்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அதில், உயிரிழந்த நபர் அரக்கோணம் வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (40) என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு கற்பகம் திரையரங்கம் அருகே மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அரக்கோணம் மசூதி தெருவைச் சேர்ந்த ஷாலாஷா (23), மதுரப்பிள்ளை தெருவைச் சேர்ந்த கமலேஷ் (22) ஆகியோரால் அடித்து கொலை செய்யப்பட்டு உடலை கால்வாயில் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஜாகிர் உசேன் கொலை தொடர்பாக ஷாலாஷா மற்றும் கமலேஷ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in