Published : 14 Feb 2022 10:56 AM
Last Updated : 14 Feb 2022 10:56 AM

விழுப்புரத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்த அண்ணன், தங்கை வறுமையால் தற்கொலை

கள்ளக்குறிச்சி

விழுப்புரம் அருகே முதியோர் இல்லம் நடத்தி வந்த அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

விழுப்புரம் கே.கே.சாலையில் வசிக்கும் வள்ளியம்மை என்பவரின் வாடகை வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. அது குறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் அழுகிய நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந் துள்ளது.

இதுகுறித்து போலீஸார், விசா ரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மணியின்மகளும், கமல்ராஜ் என்பவரின் மனைவியுமான பிரமிளா (55) என்பவரும், அவரது சகோதரர் சுசீந்திரன் என்பவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இருவரும் அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வந்தனராம். நிதிப் பற்றாக்குறை காரணமாகவும், கரோனா பொதுமுடக்கத்தாலும் முதியோர் இல்லத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் திடீரென மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஒரு வாரமாக வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர், பிரமிளாவின் இளைய சகோ தரருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பேரில், பிரமிளாவின் இளைய சகோதரர் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்த்தனர். அப்போது, வீடு பூட்டிய நிலையில் துர்நாற்றம் வீசவே, போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் நேரில் சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனாவால் முதியோர் இல்லத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x