புதுச்சேரி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் ரயில்வே போலீஸார்.
க்ரைம்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.14,444 மதிப்புள்ள மதுபானங்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை ரயில் ஒன்று புறப்பட்டது. ரயில்கள் புறப்படும்போதும், புறப்பட்ட பின்னரும் ரயில்வே போலீஸார் கண்காணிப்பில் ஈடுப்படுவது வழக்கம். அதுபோல் ரயில்வே போலீஸார் நேற்று கண்காணிப்பில் ஈடுப்பட்டபோது நடைமேடையில் உள்ள சிமெண்ட் கட்டையின் கீழ் மூன்று பைகள் இருப்பதை கண்டனர். அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், 314 மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.14,444. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை ரயில்வே போலீஸார் கலால் துறையில் ஒப்படைத்தனர்.
