Published : 14 Feb 2022 11:14 AM
Last Updated : 14 Feb 2022 11:14 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிப்பதில் சர்ச்சை: தீட்சிதரை தாக்கிய 3 தீட்சிதர்கள் மீது வழக்கு

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவதில் சர்ச்சை எழுந் துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சிற்றம்பல மேடையில் (கனக சபை) ஏறி வழிபட அனுமதிப்பது வழக்கம். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடை முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி பழைய முறையி லேயே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த 10-ம் தேதி கோயிலில் நடந்த பொதுதீட்சிதர்கள் கூட்டத் தில் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது சக்திகணேஷ் தீட்சிதர் (57) உள்ளிட்ட சில தீட்சிதர்கள் பக்தர்களை பழைய படியே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி வழிபட அனுமதிக்கலாம் என்று கூறினர். இதற்கு மற்ற தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சக்திகணேஷ் தீட்சிதர் நேற்று முன்தினம் இரவு சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்றார். அப்போது சிலர் அவரை தாக்கி, தள்ளிவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் ராஜாசெல்வம் தீட்சிதர். சிவசெல்வம் தீட்சிதர், சபேச தீட்சிதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜெயசீலா(37) என்பவர் நடராஜர் கோயிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு(கனகசபை) நேற்று செல்ல முன்றார். அப்போது தீட்சிதர்கள் சிலர் அவரை தடுத்து திட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x