பழநியில் எஸ்.எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு

பழநியில் எஸ்.எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

பழநி: பழநியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறை எஸ்.எஸ்.ஐ. மற்றும் அவரது நண்பரை வெட்டிவிட்டு தப்பியோடி யவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பழநி அடிவாரம் காவல்நிலை யத்தில் எஸ்.எஸ்.ஐ.-யாக பணிபுரிந்து வருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி யளவில் பழநி புதுநகர் சாலையில் அமர்ந்து, தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆனந்தனை அரிவாளால் வெட்டினர். இதை சந்தானகிருஷ்ணன் தடுக்க முயன்றார். இதில் சந்தானகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வெட்டியவர்கள் தப்பியோடினர். பழநி நகர் போலீஸார் இருவரையும் மீட்டு பழநியிலுள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதித்தனர். இரு வரும் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் நிலையில் வெட்டியவர்கள் யார் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. பழநி டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையிலான போலீ ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in