

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி ஒன்றில்பிளஸ் 2 படித்து வந்த 17 வயதுமாணவி ஒருவரை 2 நாட்களுக்கு முன்பு கணித ஆசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக தன்னுடன் பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம், “பள்ளியில் கணித ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, மாணவியின் உறவினர் அளித்த புகாரின்பேரில், மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணித ஆசிரியர் சசிகுமார் மீது ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.