

சென்னை: சென்னையில் 1,200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார், 6 பேரை கைது செய்தனர்.
சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி தனிப்படை போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் பிப்.3-ம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,200 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.