

விழுப்புரம்: சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது வட்ட திமுக செயலாளர் செல்வம் 2 நாட்களுக்கு முன்பு மடிப்பாக்கத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்துகொலையாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலைக்கு காரணமாக இருந்த ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோர் திருச்சி அருகே சமயபுரம் சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர்தென்மாவட்டங்களுக்கு தப்பி செல்லஉள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று தமிழகம் , புதுச்சேரி போலீஸார்வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டப் பகுதிகளில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்..
அப்போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று மாலை அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதில்உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மடிப்பாக்கம் செல்வம் கொலைவழக்கில் தொடர்புடைய சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த விக்னேஷ்(21), சென்னை பல்லவன் சாலை சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த புவனேஸ்வர்(21), சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த சஞ்சய் (21), அரக்கோணம், பழனிப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்(21), திருவள்ளூர் விஜயநல்லூரைச் சேர்ந்த கிஷோர்குமார்(26) என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 பேரையும் சென்னை மாநகரபோலீஸாரிடம் விழுப்புரம் போலீஸார் ஒப்படைத்தனர்.