

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (27). கடந்த 20-ம் தேதி ராஜ்குமாரின் தந்தை சேட் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனவேதனைய டைந்த ராஜ்குமார் அங்கிருந்து பேருந்து மூலம் புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனதுதந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள் ராஜ்குமாரை சிகிச்சைக்காகதிருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.