Published : 30 Jan 2022 07:54 AM
Last Updated : 30 Jan 2022 07:54 AM
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் 3-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் முத்தாலு (60). இவர் கடந்தாண்டு நவம் பர் 13-ம் தேதி வீட்டு வாசலில் தனது பேத்திக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பது போல் வந்த மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3.5 பவுன் செயினை பறித்துக் கொண்டு சென்றார். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி-விழுப்புரம் பிரதான சாலையில் மூலகுளம் அருகில் நேற்று ரெட்டி யார்பாளையம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் பைக்கில் வந்த நபரை மடக்கி, சோதனை செய்ததில் அவரிடம் போலியான நம்பர் பிளேட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர் புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன் நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் என்பதும், லிங்கா ரெட்டிப்பாளையம் அரசு பள்ளி யில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், அசோக்குமார் பகலில் வீட்டின் அருகே சிக்கன் கடை நடத்தி வந்துள்ளார். பகலில் சிக்கன் கடையிலும், இரவில் பள்ளி காவலாளியாகவும் இருந்து கொண்டே, அவ்வப்போது பெண் களிடம் செயின் பறிப்பு செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 23 பவுன் தங்க நகைகள், இரண்டு மோட்டார் பைக்குகள், 3 போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக் கில் சிறப்பாக செயல்பட்ட போலீ ஸாரை வடக்குப் பிரிவு எஸ்பி பக் தவச்சலம் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT