

அண்மையில் புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் சிறு மியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 10-க்கும்மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர் களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் உருளையன் பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீஸார் அந்த அழகு நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அழகு நிலைய உரிமையாளர் முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்தஜெசிமா (35), பாலியல் தொழிலுக்காக வந்த மயிலாடு துறையை சேர்ந்த ராஜ கோபால் (63) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயி ரத்து 500 பறிமுதல் செய் யப்பட்டது.
மேலும் பெண்கள் 5 பேர் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டனர்.