

விக்கிரவாண்டி அருகே வெட்டுக் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (85). மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விக் கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ராதாபுரம் அருகே செய்யாத்து விண்ணான் கிராமத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் வடிந்த நிலையில் எலும்பு கூடுகள் கிடப்பதாக வும், கால் சட்டை ஒன்று அருகில் கிடப்பதாகவும் பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித் தனர்.
இத்தகவலறிந்த விக்கிர வாண்டி போலீஸார் ஏரியில் சிதறிக் கிடந்த எலும்புகூடுகளை ஒன்று திரட்டினர். மேலும் அருகில் கிடந்த அரைக்கால் சட்டை வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த காணாமல்போன கண்ணனின் கால் சட்டைஎன்று உறுதி செய்தனர்.இதையடுத்து சேகரித்த எலும்பு கூடுகளை தடயவியல் பரிசோதனைக்காக போலீஸார் எடுத்து சென்றனர்.