

வருமானம் இன்றி தவித்த ஆட்டோ ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.
விழுப்புரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(40). ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு கரோனா காலம் முதல் போதிய வருவாய் இன்றி தவித்து வந்துள்ளார். குடும்பம்நடத்த, தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், வருவாய் இன்றியும் மன உளச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் கீழே சென்ற பிரகாஷ், அப்போது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்டேஷன் நோக்கி வந்த ரயில் இன்ஜின் முன் பாய்ந்துள்ளார். இதில் பிரகாஷின் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் ரயில்வே போலீஸார் பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன் ராஜா, பிரவின் ராஜா என்ற மகன்களும் உள்ளனர்.