

ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற் கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கடம்பா நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் கார்த் திக் குமார் (31). இவர் ராமநாத புரம் அருகே ஆர்.காவனூர் அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் விஷம் குடித்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கடன் பிரச்சினை அல் லது பலரிடம் பணம் பெற்று நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காத விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என விசா ரிக்கின்றனர்.