

மதுரை புறநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, உடல்நலம் பாதித்து கடந்த மாதம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை யில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூகநல அலுவலர் அழகம்மாள் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு மேலூர் தாலுகா பொட் டகம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (23) என்பவருக்கு, சிறுமியைத் திருமணம் செய்து கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப் பையாவை போக்ஸோவில் கைது செய்தனர்.