

மதுரை: மதுரை தத்தநேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (45). இவரது வீடு நேற்று முன்தினம் பூட்டப்பட்டு இருந்தது. இதை நோட்டமிட்ட ஒருவர் இரும்பு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட முயன்றார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கையும், களவுமாகப் பிடித்து தாக்கினர்.
பின்னர் அவரை செல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் மணிகண்டன் (24) எனவும், அவரது இருப்பிடம் செல்லூர், பெரியசாமி நகர் எனவும் தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த போலீஸார், காயமடைந்திருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.