

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகை களை அடகுவைத்து ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சங்கச் செயலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பி.கொடிக் குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் கிளியூர் கிளை செயல்பட்டு வருகிறது.
இங்கு விவசாயிகள் அடகு வைத்திருந்த அனைத்து நகை களையும் 2021 நவம்பரில் பரமக் குடி கூட்டுறவு துணை பதிவாளர் உதயகுமார் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது 81 நகைப் பொட்ட லங்களில் போலி நகைகளை வைத்து ரூ.1,47,14,000 முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து ராமநாதபுரம் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப் பட்டது.
இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தின் செயலாளர் இளமதியன், உதவிச் செயலாளர் முருகேசன், நகை மதிப்பீட்டாளர் அறிவழகன் ஆகியோர் மீது நேற்று வணிக குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.