

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்துக்கிடமாக தங்கியிருந்த 9 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே குற்ற வழக்கில் தொடர்பு இருப்பதும், கொள்ளையடிக்கத் திட்டமிட்டி ருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தேவகோட்டை அருகே மங்கலத்தைச் சேர்ந்த பூமி (49), சிவகங்கை மாத் தூரைச் சேர்ந்த பழனிச்சாமி (45), நிரேஷ் (20), காரைக்குடி அழகாபுரம் சண்முகநாதன் (44), நெம்மேனியைச் சேர்ந்த மனோஜ்குமார் (22) உட்பட 9 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.