

காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் நகைக் கடை நடத்தி வருபவர் செய்யது சாதிக் (55). இவரது கடைக்கு கடந்த 2-ம் தேதி நகை வாங்குதுபோல வந்த 2 பெண்கள், கடையில்உள்ள விதவிதமான நகைகளைப்பார்த்து விலை கேட்டுள்ளனர்.ஆனால், நகை எதுவும் வாங்காமல்சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபிறகு கடை ஊழியர்கள் நகைகளைசரிபார்த்த போது, 18 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்கள் காணாமல் போனது தெரியவந்தது.
கடையில் உள்ள சிசிடிவி கேமராபதிவுகளை ஆய்வு செய்த போது,அந்த இரு பெண்களும் வளையல்களைத் திருடியது தெரியவந்தது. ஆறுமுகநேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, இரு பெண்களையும் தேடி வந்தனர்.
கடந்த 17-ம் தேதி அதே பெண்கள் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் ஒவ்வொரு கடையாக நோட்டமிட்டவாறு சென்றுள்ளனர். நகைக்கடை ஊழியர் ஒருவர், இதுபற்றிபோலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
காயல்பட்டினம் கால்நடை மருத்துவமனை அருகே அவர்கள் நிற்பதாக தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் அமலோற்பவம் மற்றும் போலீஸார் அங்கு சென்று,அவர்கள் இருவரையும் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆவாரம்பட்டியை சேர்ந்த மார்க்கண்டேயன் மனைவி செல்வி (57), பள்ளப்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த ராஜா மனைவி பாண்டியம்மாள் (60) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த இரு வளையல்களையும் மீட்டனர்.