வத்திராயிருப்பு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய் யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

வத்திராயிருப்பு அருகே புதுப் பட்டி கான்சாபுரம் செல்லும் சாலை யில் பெரிய ஓடைப் பகுதியில் வனத் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப் பகுதி யில் உள்ள முட்புதரில் சிலர் சந்தேகத்துக்கிடமாக சென்று வந்தனர்.

இதையடுத்து வனத் துறையினர் நடத்திய சோதனையில் முட்புதரில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. வத்திரா யிருப்பு போலீஸார் நாட்டு வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், சரத்குமார், சின்னச்சாமி ஆகியோரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in