

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே பிரான்மலையில் தடையை மீறி பொங்கல் வைக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பிரான்மலை அடிவாரத்தில் செயல்படும் தனியார் குவா ரிக்கு பரம்புமலை பாது காப்பு இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த அமைப்பினர் தைப்பூசத்தை யொட்டி பிரான்மலை உச்சியில் பொங்கல் வைக்கப் போவதாக அறிவித்தனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத் தனர்.
ஆனால், நேற்று தடையை மீறி அந்த அமைப்பினர் பிரான் மலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.