

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி கருப்பசாமியின் மகன் பிரகாஷ் (24). கல்லூரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தார். படிப்பை முடித்த பிரகாஷ் தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அந்த பெண்ணும் பணிபுரிகிறார்.
அப்பெண் வேலைக்கு செல் வது அவருக்கு பிடிக்காத தால் பெண்ணின் வீட்டுக்குச் சென்று எச்சரித்தார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகார் குறித்து விசாரிப்பதற்காக போலீஸார் பிரகாஷை நேற்று காவல் நிலையம் அழைத்தனர். அங்கு வந்த பிரகாஷ்தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை குத்தினார்.
போலீஸார் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.