க்ரைம்
தூத்துக்குடி:1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, இருசக்கர வாகனத்தில் சந்தேகமான முறையில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் வி.கோவில்பத்தை சேர்ந்த மந்திரம் மகன் சுந்தரம் (22), கொங்கராயகுறிச்சியை சேர்ந்த பழனி மகன் வேல்பாண்டி (20), செய்துங்கநல்லூர் அய்யமார் தெரு கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 3 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாமற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.
