விருத்தாசலம்: கள்ளச்சாராயம் விற்கும் இடத்தை கூற மறுத்தவருக்கு கத்திக்குத்து

விருத்தாசலம்: கள்ளச்சாராயம் விற்கும் இடத்தை கூற மறுத்தவருக்கு கத்திக்குத்து
Updated on
1 min read

விருத்தாசலம் அடுத்த ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (44). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகேவுள்ள கடை முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் இடம் தொடர்பாக கேட்டுள்ளார். தனக்கு அப்படி எதுவும் தெரியாது என்று மாணிக்கவேல் கூறினார். இதனால் ஆவேசமடைந்த அந்த இளைஞர், மாணிக்கவேலை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணலூரைச் சேர்ந்த பிரேம் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in