

சாத்தூர் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே உள்ள பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி சந்தனமாரி(27). நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றார். அப்போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தனமாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.