திருப்புவனம் அருகே இளைஞர் கொலை: ஊராட்சி துணைத் தலைவர் மகன்கள் உட்பட 5 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கல் விழா நடந்தது. அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் ரவி, தன்னிடம் கேட்காமல் எப்படி பொங்கல் விழா நடத்தலாம் எனக் கேட்டுள்ளார். இதனால் பொங் கல் விழா நடத்திய கருப்புச்சாமி தரப் பினருக்கும், ரவி தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அன்று இரவு ரவியின் மகன்கள் சிவா(26), சிவானந்தம்(24), ராஜ்குமார்(21), அவர்களது உறவினர்கள் சரத்குமார்(20), கண்ணன்(19) ஆகிய 5 பேரும் எதிர் தரப்பைச் சேர்ந்த கருப்புச்சாமி(28), அருண்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர்.

இதில் கருப்புச்சாமி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அருண்குமார் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவா, சிவானந்தம், கண் ணன், ராஜ்குமார், சரத்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in