ராணிப்பேட்டை அருகே காதலர்கள் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே காதலர்கள் தற்கொலை
Updated on
1 min read

காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் சந்தியா(18). அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி மகன் கதிர்வேல்(24) கேட்டரிங் முடித்து ராணிப்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டு களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலறிந்த சந்தியாவின் காதலன் கதிர்வேல் சோளிங்கர் அருகே உள்ள நரசிங்கபுரம் என்ற கிராமத்துக்கு சென்று அங்கு மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in