ரூ.21 கோடி ஹெராயின் பறிமுதல் வழக்கு: தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ரூ.21 கோடி ஹெராயின் பறிமுதல் வழக்கு: தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published on

தூத்துக்குடியில் ரூ.21 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மத்திய பாகம் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தருவைகுளம் அம்புரோஸ் நகரை சேர்ந்த ச.அந்தோணிமுத்து (42), தருவைகுளம் நவமணிநகரை சேர்ந்த ரா.பிரேம்சிங் (38), பட்டினமருதூரைச் சேர்ந்த ச.கசாலி மரைக்காயர் (27) ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின்படி, மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in