

புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது கரோனா முன்தடுப்பு காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவுஇடை வெளியின் போது, இப்பள்ளி மாணவர்கள் புவனகிரியில் உள்ள பங்களா பேருந்து நிறுத்தம் நிழற்குடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவனை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கினர். இதை அவ்வழியாக சென்ற காவலர் பார்த்து சத்தம் போட, மாணவர்கள் ஓடி விட்டனர். இரு மாணவர்களை மட்டும் பிடித்த காவலர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.