

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோதுவைச் சேர்ந் தவர் விஜயகுமார் (64). வெளிநாட்டில் டர்பைன் மெக்கானிக்காக வேலை பார்த்த இவர் 2019-ல் சொந்த ஊர் திரும்பினார்.
இந்நிலையில், இவரது மின்னஞ்சலுக்கு கானா நாட்டில் பென்டானிக் எம்க்யூ திரவம் தேவைப்படுவதாக வும், அது இந்தியாவில் உள்ள சர்மா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் விற்பதாகவும், அதை வாங்கிவைத்தால் முகவர் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதை நம்பி சர்மா எண்டர்பிரைசஸ் நிறுவ னத்தை விஜயகுமார் தொடர்புகொண்டார். பென் டானிக் திரவத்தை வாங்க அவர்கள் அனுப்பிய வங்கிக்கணக்கில் ரூ. 2.84 லட்சம் அனுப்பினார். அதன்பின் நிறுவனத்தினரை தொடர்புகொள்ள முடிய வில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.