

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் காந்தி நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ் குமார்(32).
சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் ஈச்சம்பட்டி வரட்டு ஏரியில் கை, கால், கழுத்து பகுதியில் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மண்ணச்சநல்லூர் போலீஸார் உடலைக் கைப் பற்றி விசாரணை மேற்கொண் டனர்.
அதில் நிலம் விற்ற பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் அவரது தாய் அம்ச வள்ளியே ஆட்களை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தாய் அம்சவள்ளி(59), சதீஷ்குமாரின் நண்பரும், மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனின் சகோதரருமான நளராஜா (எ) புல்லட் ராஜா(41), கொத்தனார் ராஜா(31), சுரேஷ் பாண்டி (எ) சுரேஷ், சேக் அப்துல்லா(45), அரவிந்த்சாமி(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிச்சை முத்துவை தேடி வருகின்றனர்.