கோவை ரயிலில் ஆவணங்களின்றி இளைஞர் கொண்டுவந்த ரூ.30 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கோவைக்கு ரயிலில் எடுத்து வந்த ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் படையினர்.
உரிய ஆவணங்கள் இன்றி கோவைக்கு ரயிலில் எடுத்து வந்த ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் படையினர்.
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக யாரேனும் ரயில் மூலம் எடுத்துச்செல்கிறார்களா என்பதைக் கண்டறிய கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎஃப்) நேற்றுமுன்தினம் காலை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தன்பாத்-ஆலப்புழா இடையிலான ரயிலில் ஒரு பயணியிடம் சோதனை மேற் கொண்டபோது, அவர் வைத்திருந்த பையில் ரூ.30 லட்சம்தொகை இருந்தது. விசாரணை யில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லால் சிங் ராவ் (19) என்பதும், சென்னையிலிருந்து கோவை வரை பயணம் செய்ய டிக்கெட் வைத்திருந்ததும் தெரியவந் தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், கோவைரயில் நிலையத்தில் உள்ள ஆர்பிஎஃப் காவல்நிலையத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட தொகை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in