தூத்துக்குடி அருகே செல்போன் கொடுக்காததால் முதியவர் கொலை: இளைஞர் கைது

தூத்துக்குடி அருகே செல்போன் கொடுக்காததால் முதியவர் கொலை: இளைஞர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள பெருங்குளம் உடையடியூரைச் சேர்ந்தவர் ஐ.நாகபத்ரம்(65). இவர், நேற்று முன்தினம் நட்டாத்தி- மீனாட்சிபட்டி சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். சாயர்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சாயர்புரம் ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் வைகுண்டம் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நட்டாத்தி ஓடை பாலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றித் திரிந்த சாயர்புரம் கொம்புகாரன்பொட்டலைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தங்கம்(20) என்பவரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

நாகபத்ரத்திடம் தங்கராஜ் செல்போன் கேட்டுள்ளார். கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அரிவாளால் வெட்டியதில் நாகபத்ரம் உயிரிழந்துள்ளார். தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in