

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்தது போன்று மோசடி யில் ஈடுபட்ட சேந்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் மகாமன்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய விவசாயிகள் மகா மன்ற பிரச்சார இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா ளர் கலியமூர்த்தி தலைமையில், அதன் நிர்வாகிகள் ஆறுமுகம், ஏழுமலை, புஷ்பராஜ், வீரன், எல்லப்பன் உள்ளிட்டோர் நேற்றுதிருக்கோவிலூர் கூட்டடி, கள்ளக் குறிச்சி, ஆரிநத்தம் பகுதிகளில் முறைகேடுகளை கண்டித்து பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சேந்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிநிர்வாகம் 133 சுய உதவிக் குழுக்க ளுக்கு கடன் கொடுக்காமலேயே கடன் கொடுத்ததாகவும் முறைகேடு நடந்திருக்கிறது. வருடத் திற்கு 1,000 ஏக்கருக்கு மேல் முந்திரி காடுகளை நஞ்சை நிலம் என வகை மாற்றம் செய்து கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
90 விவசாயிகள் தங்கள் நகைகளை அடகு வைத்து அதற்கானவட்டியும் கட்டி வந்தனர்.இந்நிலையில் முன் அறிவிப்புகொடுக்காமல் நகைகளை ஏலம் விட்டதாக கூறி முறைகேட்டில் ஈடு பட்ட தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக திருக்கோ விலூர் கூட்டுறவு சார்- பதிவாளர் கீர்த்தனாவிடம் கேட்டபோது, "முறைகேடு தொடர்பாக எங் கள் பார்வைக்கு வந்தவுடன் நடவடிக்கை மேற்கொண்டு கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.