

விருதுநகர்: சாத்தூர் அருகே வல்லம்பட்டி பட்டாசு ஆலையில், கடந்த 5-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காசி, செந்தில்குமார், கருப்பசாமி, அய்யம்மாள், முனியசாமி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி பூமாரி, அவரது மகன்கள் கருப்பசாமி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகியோர் மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில், பூமாரியின் மகன் கருப்பசாமியும் வெடி விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆலையின் உரிமையாளர் பூமாரியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.