

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோயில் வீதியில் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பள்ளிச் சீருடையுடன் மாண வர்கள், இரு மாணவரை மாறிமாறி தாக்குவதும், அதனை அங்கிருந்தவர்கள் தடுத்து, ‘ஏன் தாக்குகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்புவதும் பதிவாகி உள்ளது.
மேலும் மாணவர்களின் தகராறை, வீடியோ எடுத்தவரிடம் ‘எதற்கு எடுக்கிறீர்கள்?’ என சண்டையிட்ட மாணவர்கள் கேள்வி கேட்பதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புகார் வரவில்லை என்றாலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தியால்பேட்டை போலீ ஸார் தெரிவித்துள்ளனர்.