

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை மர்ம நபர்கள் தாக்கினர். இதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர் காவல்நிலையத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பம் சமயதேவர் தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் (45). இவர், வாகன உதிரி பாக விற்பனைக் கடை வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பின் மாவட்டத் தலைவராக இருக்கிறார். ரவிக்குமார் நேற்று கடைக்கு அருகில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முகக் கவசமணிந்த 4 பேர் அவரது வாகனத்தை வழிமறித்து தக ராறு செய்துள்ளனர். பின்னர் ஹெல்மெட்டால் அவரது தலையில் தாக்கினர். இதில் ரவிக்குமாருக்கு தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்பு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமை யிலான போலீஸார், ரவிக்குமாரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ரவிக்குமாரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருவதாகவும், தாக்குதலில் ஈடு பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.