

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தமிழ்பாடியைச் சேர்ந்த தனபாலகிருஷ்ணன் என்பவர் சாமிநத்தம், சித்தலக்குண்டு, ஒத்த வீடு, கீழக்குருணைகுளம், ராமசாமிபட்டி, டி.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதில் பலரிடம் பணம் வசூலித்து 15 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரு மாதங்களாக தனபாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். தாங்கள்ஏமாற்றப் பட்டதை அறிந்த பாதிக்கப்பட்டோர் இது குறித்து திருச்சுழி போலீஸில் புகார் அளிக்கச் சென்றனர்.
போலீஸார் விசாரணை நடத்திய பிறகு இதுகுறித்து பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்குமாறு அவர்களை அனுப்பி வைத்தனர்.