அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெண் உடல் மீட்பு

அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெண் உடல் மீட்பு
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (55). இவரது மனைவி ஜோதி(48). இவர், அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் நேற்று காலை ஜோதி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதையடுத்து, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து ஜோதியின் உடலை மீட்டனர்.

பின்னர், காவல் துறையினர் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக பணியாளராக நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பணியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங் களாக போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்த ஜோதி நகராட்சியில் அலுவலகத்தில் மீண்டும் வேலை கேட்டு அங்கு பணியாற்றி வரும் உயர் அதி காரிகளிடம் முறையிட்டு வந்த தாக தெரிகிறது. இந்நிலையில், நகராட்சி வளாகத்தில் உள்ள கிணற்றில் ஜோதி நேற்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in