

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயபுரம்காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முஹம்மது, சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராசாபட்டி விலக்கு அருகே வந்த சுமை வாகனத்தை நிறுத்தினர். அதில், 7 மூடைகளில் காப்பர் வயர்கள் இருந்தன. சிந்தலக்கரை பகுதியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து அவற்றை திருடியது தெரியவந்தது.
வாகனத்தில் இருந்த மாப்பிள்ளையூரணி மாரி முத்து(40), துப்பாசுபட்டி பழனி முருகன்(40), மருதபெருமாள் (37), தாளமுத்து நகர் பாக்கியராஜ் (38), லூர்தம்மாள்புரம் சரவணகுமார் (23)ஆகிய 5பேர் கைது செய்யப் பட்டனர். தப்பியோடிய ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.ரூ.10 லட்சம் மதிப்பிலான 210 கிலோ காப்பர் வயர்களையும், சுமை வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.