

திருப்பூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த மதபோதகர், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் சாமுவேல் (36). பெத்தேல் எழுப்புதல் தேவ திருச்சபையின் மதபோதகர். இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சாமுவேல் மீது போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.