

திருப்புவனம் அருகே சொக்கனா திருப்பைச் சேர்ந்தவர் தண்டிலிங்கம்(34). திருப்புவனத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர கணினி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
நேற்று மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். திருப்புவனத்தை அடுத்த செல்லப்பனேந்தல் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு காவேரி என்ற மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.